மணல் கடத்தலில் ஈடுபட்ட மாட்டு வண்டிகள் பறிமுதல்.
Seizure of cattle carts involved for sand smuggling.
வெள்ளாற்று பகுதியில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அகரம் சீகூர் வெள்ளாற்று பகுதியில் அடிக்கடி மாட்டு வண்டி மற்றும் டிப்பர் வண்டிகளில் ஆற்று மணல் திருடுவதாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் குன்னம் தாசில்தார் கிருஷ்ணராஜ் உத்திரவின்படி அகரம்சீகூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன், கிராம உதவியாளர் தேவேந்திரன் ஆகியோர் நேற்று அதிகாலையில் அகரம்சீகூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
மாட்டு வண்டிகளில் மணல்
அப்போது அகரம்சீகூரை சேர்ந்த மூன்று பேர் 3 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டு திட்டக்குடி-செந்துறை சாலையில் வந்து கொண்டு இருந்தனர். அதைக்கண்ட சரவணன் மாட்டு வண்டிகளை மறித்தார். இதைக்கண்ட அம்மூவரும் மாட்டு வண்டிகளை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து சரவணன் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
Keywords: Seizure of cattle carts
You must log in to post a comment.