வரி செலுத்தாத பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல்.
Seizure of Boklin
சாலை வரி செலுத்தாத 6 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை வரியை அரசுக்கு செலுத்தாமல் பொக்லைன் எந்திரங்கள் தொடர்ந்து இயங்கி வருவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1 செல்வகுமார் ஆகியோர் கடந்த 2 நாட்களாக பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு சாலை வரி செலுத்தாமல் இயங்கி வந்த 6 பொக்லைன் எந்திரங்களும், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாகனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை உடனடியாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.
தினத்தந்தி
Keyword: Seizure of Boklin
You must log in to post a comment.