சீரக சம்பா அரிசியின் பயன்கள் || Seeraga samba rice
சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் என்று பலர்.
சொல்வதை நீங்களும் கேட்டிருக்கலாம். அது உண்மைதான் அப்படி ஒரு அற்புதமான சுவை இந்த அரிசியில் உண்டு. தமிழகத்தில் சில இடங்களில் பாஸ்மதி என்னும் நீளமான அரிசி அல்லது சாதாரண பச்சரிசியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் பெரும்பாலும் இந்த சீரக சம்பா அரிசியில்தான் பிரியாணி செய்கின்றனர். கேரளாவிலும் சீரக சம்பா அரிசியின் பயன்பாடு ஒரு சில இடங்களில் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். Jeeraga Samba rice
சீரக சம்பா அரிசியில் அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழும். இந்த அரிசியில் அப்படி என்ன இருக்கிறது என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். சீரக சம்பாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. முக்கியமாக இந்த அரிசியை நாம் சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும். அதேபோல் இவ்வரிசியில் கொலஸ்ட்ரால் இல்லாததால் உடல் பருமன் உடையவர்கள் கூட இந்த அரிசியைத் தாராளமாக எடுத்துக் கொண்டு வரலாம்.
சீரக சம்பா: Seeraga Samba Arisi
இந்த அரிசிக்குப் பூர்வீகமே நம் தமிழகம்தான். பழமையான அரிசி ரகங்களில் இதுவும் ஒன்று. கொஞ்சம் காஸ்ட்லியான அரிசிதான் இருப்பினும் சுவை நன்றாக இருக்கும். இது சிறிய வடிவில் பார்க்கச் சீரக விதைகளைப் போன்று இருப்பதால் சீரக சம்பா என்று பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர்.
ஊட்டச்சத்துகள்: Seeraga Samba Arisi benefits
புரோட்டீன், செலினியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. இந்த அரிசியில் கொழுப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாம் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்காது. உடல் பருமனாக இருப்பவர்கள் இந்த அரிசியைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
- செலினியம் நல்ல சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன் ஆகும். இது நமது செல்கள் ஆக்ஸினேற்ற அழுத்தத்தால் அழிவதிலிருந்து காக்கிறது.
- இது குடல், சிறுகுடல் மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது.
- இதயம் தொடர்பான நோய்களிலிருந்தும் நம்மைக் காக்கிறது.
- மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- தைராய்டு சுரப்பி செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையைத் தடுக்க உதவுகிறது.
- நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- ஆஸ்துமா அறிகுறிகளிலிருந்து நம்மைத் தடுக்க உதவுகிறது.
- அரிசியில் உள்ள செலினியம் அழற்சியைக் குறைக்க உதவுகிறது மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
- இதில் சோடியம் இருப்பதால் நம்முடைய இரத்த அழுத்தத்தைப் பராமரிப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
- சீரக சம்சா அரிசி ஒரு மலமிளக்கியாகச் செயல்படக் கூடியது. எனவே மலச்சிக்கலைத் தடுக்கும்.
பல வகைகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்த சீரக சம்பா அரிசியை நீங்களும் வாங்கி உண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அவல் உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
சாமை அரிசியின் பயன்கள் | |
பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி | |
குதிரைவாலி அரிசியில் உள்ள பயன்கள் | |
கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள் | |
சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..! | |
பார்லி அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் | |
கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? | |
தினை அரிசியின் பயன்கள் || Thinai rice | |
‘வெள்ளை சோளம்’ இதன் பயன்கள் தெரிந்து கொள்வோமா? | |
மருத்துவம் குணம் நிறைந்த மூங்கில் அரிசி..! | |
‘கம்பு’ இந்த தானியத்தில் என்ன சத்துகள் உள்ளது தெரியுமா? | |
‘கேழ்வரகு’ இது உடல் எடையை குறைக்க உதவும் தெரியுமா? |
You must log in to post a comment.