ADVERTISEMENT
Security measures to prevent internet fraud

இணைய மோசடிகளைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

Security measures to prevent internet fraud

குவைத்: மின்னணு மோசடிகள் பல்வேறு முறைகளில் மக்களை ஏமாற்றி வருவதால், அதிகாரிகள் அவற்றை தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் பரவிக்கொண்டிருக்கும் ஒரு புதிய மோசடி குறித்து இணைய பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மோசடிகளில் ஈடுபடும் மோசடி நபர்கள் பொதுவாக பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் கேட்பதோடு, பணம் கொடுக்காவிட்டால் புகைப்படங்களை வெளியிடுவதாகவும் மிரட்டுகின்றனர். குவைத் உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் துறை, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் (சிட்ரா) மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 392 போலி இணையதளங்களை முடக்கியது. இதில் 52 இணையதளங்கள், வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பதற்காக செயல்படும் ‘அல்-துர்ரா’ நிறுவனத்தைப் போல போலி நிறுவனங்கள் இணையதளங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசடி செயல்களில் ஈடுபட்ட 662 வாட்ஸ்அப் எண்களையும் முடக்கியுள்ளனர். இதில் 65% ‘அல்-துர்ரா’ நிறுவனத்தைப் போலவே செயல்பட்டன என்பது அதிர்ச்சி தகவல்.

முகமது அல்-ரஷிதி, எலெக்ட்ரானிக் மீடியா யூனியனின் சைபர் செக்யூரிட்டி கமிட்டியின் தலைவர், பல குவைத் குடிமக்கள் இந்த மோசடிகளுக்கு பலியாகி, அவர்களின் புகைப்படங்கள் திருடப்பட்டதாக தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும் அவர், சந்தேகத்திற்குரிய இணைப்புகளைத் தவிர்க்கும் படி கேட்டுக் கொண்டார். அதே போல கேமரா ஆக்ஸஸ் சேய்ய அனுமதிக்க கூடாது என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். இத்தகைய இணைப்புகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டும்; ஏனெனில் நீங்கள் அதை கிளிக் செய்தால், பின்னர் சிக்கலைத் தீர்ப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.

டிஜிட்டல் மாற்றம் மற்றும் ஆலோசனையில் நிபுணர் ஜமிலா அல்-ஒதைபி கூறும் போது “சைபர் கிரைம்கள் விரைவாக வளர்ந்து கொண்டிருப்பதால், நமக்கு எதிரான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள டிஜிட்டல் விழிப்புணர்வை மேம்படுத்துவது மிகவும் அவசியமாகியுள்ளது,” என்று கூறினார். சமூக ஊடகங்கள் அல்லது மின்னஞ்சல்கள் மூலம் பரவும் சந்தேகத்திற்குரிய இணைப்புகள், ஹேக்கர்களால் புகைப்படங்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களை திருட பயன்படுத்தப்படுகின்றன.

என்ன வென்று தெரியாத இணைப்புகள் அல்லது நம்பமுடியாத ஆதாரங்களில் இருந்து வரும் இணைப்புகளை கிளிக் செய்வதைத் தவிர்க்குமாறு எச்சரித்தார். மேலும், கணக்குகளைப் பாதுகாக்க இரண்டு-படி சரிபார்ப்பு (Two-step Verification) செயல்படுத்துதல், வலுவான கடவுச்சொற்களை (Password) பயன்படுத்துதல், ஆன்லைனில் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதைத் தவிர்ப்பது. மேலும் பாதுகாப்பு பயன்பாடுகளைப் புதுப்பித்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று வலியுறுத்தினார்.

மோசடி இணைப்புகளை நீங்கள் தவறுதலாக கிளிக் செய்தால், உடனடியாக அதிகாரிகளிடம் புகார் செய்யவும். அச்சுறுத்துபவர்களுடன் தொடர்புகொள்வதைத் தவிர்க்கவும் அவர் அறிவுறுத்தினார்.


Keywords: Security measures, Gulf Tamil News, Tamil Gulf News, GCC Tamil News, Kuwait News Tamil, Kuwait Tamil News, Kuwait News

ADVERTISEMENT

அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்

Our Facebook Page

அமீரக செய்திகள்
துபாய் குளோபல் வில்லேஜ்: அக்டோபர் 16, 2024 முதல் திறப்பு
ஷார்ஜாவில் 600 திர்ஹம் கடனுக்காக கொலை; 7 பேர் கைது
அமீரகம் பொது மன்னிப்பு: சிக்கல்கள் மற்றும் தீர்வுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *