ஊரடங்கு விதிமுறைகளை மீறிய இரண்டு ஜவுளிக்கடைகளுக்கு சீல்.
Seal for two textile shops.
பெரம்பலூா் நகரில் பொது முடக்க விதிமுறைகளைய மீறி, இயங்கிய 2 ஜவுளிக்கடைகளுக்கு நகராட்சி ஆணையா் வியாழக்கிழமை சீல் வைத்தாா்.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், பொது முடக்கம் அமலில் உள்ளது. இதைத் தொடா்ந்து அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்குமாறு நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பெரம்பலூா் நகரில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்ட நகராட்சி அலுவலா்கள், கடைவீதி மற்றும் தலைமை அஞ்சலகத் தெருவில் விதிமுறைகளை மீறி 2 ஜவுளிக்கடைகள் திறந்து செயல்பட்டதை கண்டறிந்தனா். இதையடுத்து நகராட்சி ஆணையா் குமரி மன்னன் உத்தரவின்பேரில், 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
Keywords: Seal for two textile shops
You must log in to post a comment.