பெரம்பலூாில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்.

353

பெரம்பலூாில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்.


Perambalur News: SDPI protests in Perambalur.


விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை கண்டித்து பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை (நேற்று) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் முஹம்மது ரபிக் தலைமை வகித்தாா்.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா, விலை உறுதியளிப்பு, பண்ணை ஒப்பந்த விவசாய மசோதா, விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாத மசோதா ஆகிய மூன்று மசோதாக்களையும் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா். தொடா்ந்து, வேளாண் மசோதா நகல்களை கிழித்தெறியும் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் முஹம்மது பாருக், மாவட்ட பொதுச்செயலா் அப்துல்கனி, மாவட்டச் செயலா்கள் ஷாஜகான், முஹம்மது பிலால், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அகமது இக்பால், அஸ்கா் அலி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

20 போ் மீது வழக்கு: அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால், இப் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினா் மீது பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
%d bloggers like this: