கொடூர மரணத்திற்கு நீதி கேட்டு SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
SDPI party protests demanding justice for brutal death.
SDPI கட்சியின் பெரம்பலூர் மாவட்டம், வி. களத்தூர் நகர கிளையின் சார்பாக தலைநகரம் டெல்லியில் காவல்துறை அதிகாரி சபியா சைஃபியின் கொடூர மரணத்திற்கு நீதி கேட்டும், உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வி. களத்தூர் மில்லத் நகர் பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் பெரம்பலூர் சட்டமன்றதொகுதி செயலாளர் A.சித்திக் பாஷா தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். வி.களத்தூர் நகர செயலாளர் K. முஹம்மது இக்பால் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
SDPI கட்சியின் மாவட்ட தலைவர் S.முஹம்மது இக்பால் அவர்கள் கண்டன உரையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார். மாவட்ட துணைத் தலைவர் M. முஹம்மது பாரூக் அவர்கள் ஒன்றிய அரசின் அலட்சிய போக்கையும், பெண்களின் பாதுகாப்பற்ற சூழ்நிலை பற்றியும் கண்டன உரையாற்றினார்.
விமன்ஸ் இந்தியா மூமண்ட் சகோதரிகள் இடைஇடையே கண்டன கோஷம் எழுப்பினர். இறுதியாக வி.களத்தூர் கிளை செயலாளர் S.முஹம்மது நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தொகுதி நிர்வாகிகள் உட்பட, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.
Keywords: SDPI party protests,
You must log in to post a comment.