Schools reopened in Kuwait

குவைத்தில் நேற்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு 

139

குவைத்தில் நேற்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.

Schools reopened in Kuwait from yesterday.

18 மாதங்களுக்கு பிறகு குவைத்தில் நேற்று மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது. ஏராளமான மாணவர்கள் வருகை புரிந்தனர்.

குவைத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று அதாவது 26ம் தேதி முதல் துவங்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் அரசின் வழிமுறையின் படி நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

மழலையர் பள்ளிகள், ஆரம்ப மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான வகுப்புகள் குவைத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கான பள்ளிகளில் நேற்று முதல் தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு புது சீருடையில் வந்தனர். மீண்டும் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக வரவேற்றனர்.

குழந்தைகளுக்காக அலங்கரிக்கப்பட்ட வகுப்பறைக்குள் மாணவர்கள் ஆர்வமுடன் சென்று அமர்ந்தனர். அனைத்து பள்ளி வாளாகங்களும் பல மாத இடைவெளிக்குப் பிறகு குழந்தைகளின் வருகையால் பரபரப்பாக காணப்பட்டது.

கோவிட் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றியபிறகே வகுப்புகளுக்குள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. மொத்த மாணவர்களில் 50சதவிகிதம் பேர் நேரடியாகவும், மீதம் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதே போல் பள்ளி பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் பாதி எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்களை ஏற்றுவதற்கு அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Our Facebook Page

Keywords: Schools reopened, Schools reopened in Kuwait, Gulf News in Tamil, GCC News in Tamil, Today Gulf News in Tamil

English

Schools reopened in Kuwait yesterday after 18 months. A large number of students attended.

Classes for students in schools in Kuwait started yesterday (16/09/2021). Schools that were closed due to the spread of corona infection were reopened yesterday as per the government’s instructions.

Kindergartens, classes for elementary and high school students started yesterday in schools for foreign students in Kuwait. After a long day thousands of students came to their schools in new uniforms. Teachers happily welcomed students back to school.

The students eagerly went and sat inside the classroom decorated for the children. All the school premises were seen bustling with the arrival of children after a gap of several months.

Permission to enter the classes was granted only after the Govt had duly followed the security precautions. About 50 per cent of the total students are arranged to come to school directly and the rest in rotation online.

It is also worth noting that only half of the total seats on school buses are allowed to load students.




%d bloggers like this: