School student electrocuted and killed

குன்னம் அருகே பள்ளி மாணவன்  மின்சாரம் பாய்ந்து பலி.

471

குன்னம் அருகே பள்ளி மாணவன்  மின்சாரம் பாய்ந்து பலி.

School student electrocuted and killed.

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கவியரசன் (வயது 10). இவர் கிளியூர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் அவனது வீட்டின் அருகில் உள்ள மற்றொரு செல்வராஜின் வீட்டிற்கு மின் கம்பத்தில் இருந்து மின்சார சர்வீஸ் வயர் சென்றது. இந்த வயர் நீண்ட தூரம் சென்றதால் தாழ்வாக தொங்கிக்கொண்டு இருந்தது. இதனால் அந்த வயர் தொங்காமல் இருக்க இரும்பு குழாயால் முட்டுக் கொடுத்துள்ளனர்.

மின்சாரம் பாய்ந்து சாவு

தற்போது மழைக்காலம் என்பதால் வயரில் இருந்து மின்சாரம் கசிந்து, முட்டு கொடுக்கப்பட்டிருந்த இரும்பு குழாயில் மின்சாரம் பாய்ந்தது. இதை அறியாத கவியரசன் நேற்று அப்பகுதியில் விளையாடியபோது இரும்பு குழாயை தொட்டுள்ளான். இதனால் குழாயில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் கவியரசன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கவியரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினத்தந்தி

எமது பேஸ்புக் பக்கம்

Keywords: School student killed, Perambalur News




%d bloggers like this: