School buses will operate with restrictions in Sharjah.

ஷார்ஜாவில் கட்டுப்பாடுகளுடன் பள்ளி பேருந்துகள் இயக்கப்படும்.

486

ஷார்ஜாவில் கட்டுப்பாடுகளுடன் பள்ளி பேருந்துகள் இயக்கப்படும்.


Gulf News: School buses will operate with restrictions in Sharjah.


ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த பள்ளி கல்வியாண்டு வரும் செப்டெம்பர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து செல்லும் பள்ளி பேருந்துகள் 50% மாணவர்களுடன் மட்டுமே இயக்கப்பட வேண்டுமென ஷார்ஜா தனியார் கல்வி ஆணையம் அறிவித்துள்ளது.

அடுத்த கல்வியாண்டில் தனியார் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான கல்வி ஆணையத்தின் விரிவான வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது.

Gulf News:

“புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஷாா்ஜா தனியார் கல்வி ஆணையத்தின் இயக்குனர் அலி அல் ஹுசைனி தெரிவித்துள்ளார்.

பள்ளி பேருந்துகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ஒவ்வொரு பயணத்திற்கு முன்பும் பேருந்தை சுத்திகரிப்பு செய்யவேண்டும்
  • சமூக இடைவெளியுடன் மாணவர்களை பேருந்தில் ஏற்ற வேண்டும்
  • முகக்கவசம் கட்டாயம்
  • மாணவர்களின் உடல்நலனை கண்காணித்தல் வேண்டும்
  • மாணவர்களின் உடல் வெப்பநிலையை கண்காணித்து ஏற்றுதல் வேண்டும்
  • சமூக இடைவெளியுடன் பேருந்தில் அமரவைக்கப்பட வேண்டும்
  • சீட் பெல்ட் கட்டாயம்
  • சமூக இடைவெளியுடன் மாணவர்களை இறக்கி விட வேண்டும்
  • பயணம் முடிந்தவுடன் பேருந்தை சுத்திகரிப்பு செய்ய வேண்டும்

Business Idea:

keyword: gulf news,




%d bloggers like this: