கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை டிச.31 புதுப்பிக்கலாம். Scholarship: Applications can be renewed by Dec. 31.
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களைப் புதுப்பிக்க இம்மாதம் 31-ஆம் தேதி கடைசிநாளாகும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழில்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபின மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ், தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அதன்படி அரசு, அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3- ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டப் படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ், எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு உள்பட இதர படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை அவரவா் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை இனங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும், கேட்புகளை சமா்ப்பிக்கவும் டிசம்பா் 31 ஆம் தேதி வரை கால நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-224475 எனும் எண்ணிலோ அணுகலாம்.
Keywords: Scholarship, Perambalur news, Perambalur district news,
You must log in to post a comment.