ADVERTISEMENT
Saudi Arabia Warns of High Temperatures During Hajj

ஹஜ்ஜின் போது சராசரிக்கும் அதிகமான வெப்பம் இருக்கும் என எச்சரிக்கை!

Saudi Arabia Warns of High Temperatures During Hajj

இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு வருகை தரும் யாத்திரிகர்கள் மிக அதிக வெப்பநிலையை எதிர்கொள்ள நேரிடும் எனச் சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ஜூன் 14 ஆம் தேதி தொடங்கும் ஹஜ்ஜின் போது மெக்கா மற்றும் மதீனாவில் வெப்பநிலை சுமார் 44 டிகிரி செல்சியஸ் (111 டிகிரி பாரன்ஹீட்) இருக்கும் என்று தேசிய வானிலை மையத் தலைவர் அய்மன் குலாம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு வெப்பநிலை இயல்பை விட 1.5 முதல் 2 டிகிரி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை முன்னறிவிப்பு மிகவும் குறைந்த ஈரப்பதம் (25%) மற்றும் கிட்டத்தட்ட மழை இல்லை என்று கணித்துள்ளது.

ஹஜ் என்பது இஸ்லாத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மத நிகழ்வாகும். அங்கு முஸ்லிம்கள் நான்கு நாட்களில் மெக்காவில் தொடர்ச்சியான சடங்குகளை முடிக்க வேண்டும். கடந்த ஆண்டு 1.8 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் ஹஜ்ஜில் பங்கேற்றனர், மேலும் 48 டிகிரி செல்சியஸ் (118 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை காரணமாக 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வெயிலின் காரணமாகப் பாதிக்கப்பட்டனர்.

யாத்திரிகர்கள் வெப்பத்தைச் சமாளிக்க உதவுவதற்காகச் சவுதி அதிகாரிகள் குளிரூட்டப்பட்ட கூடாரங்களை வழங்கி வருகின்றனர். யாத்திரிகர்கள் நிறையத் தண்ணீர் குடிக்கவும் மற்றும் உணவு கெட்டுப்போகாமல் இருக்கக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

கடுமையான வெப்பம் இருந்தபோதிலும் ஹஜ் கடமையை நிறைவேற்றுதற்குப் பாதுகாப்பானதாகவும் வசதியாகவும் இருப்பதற்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Our Facebook Page

இதையும் படிக்கலாம்
பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட 220 கார்கள் பறிமுதல்
ஜுன் 1 முதல் யூஸ் அன் த்ரோ பைகளுக்கு தடை
விசிட் விசாவில் கூடுதல் நாள் தங்கினால் அபராதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *