சாமை அரிசியின் பயன்கள்..! samai rice health benefits
சிறுதானியங்களில் முக்கிய பங்கு வகிக்கும் சாமை அரிசியைப்பற்றி நமது இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இந்த சிறுதானியத்தில் அப்படி என்ன இருக்கிறது? ஏன் இப்பொழுது தேடு பொறியில் இந்த சாமை அரிசியை எல்லோரும் தேடுகிறார்கள்? இதனால் உடலுக்கு என்ன வகையான பலன் இருக்கிறது. இதை யாரெல்லாம் சாப்பிடலாம் என்பதைப் பற்றித் தெளிவாக நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
பார்ப்பதற்குச் சிறு மாற்றத்துடன் இந்த சிறுதானியங்கள் இருக்கிறது. அதாவது சாமை, குதிரை வாலி, வரகு, பனிவரகு, தினை ஆகியவை பார்ப்பதற்குக் கொஞ்சம் வித்தியாசத்துடன் ஒரே மாதிரியாக இருக்கிறது. அப்படி இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல. இந்த பதிவில் சாமை அரிசியைப் பற்றிப் பார்க்கலாம். படித்துப் பாருங்கள் பிடிக்கும் பட்சத்தில் மற்றவர்களுக்குச் சேர் செய்யுங்கள்.
சாமை இந்த அரசியில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. இப்படி சத்து நிறைந்த சாமையை வாங்கி நாம் சாப்பிட்டால் நமது உடலுக்கு என்ன என்ன நன்மைகள், பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போமா?
சாமை அரிசியின் பயன்கள் – samai rice health benefits
எலும்புகள் பலம் பெற: (samai millet benefits)
இந்த அரிசியில் கால்சிய சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. ஆகையால் இந்த சாமை அரிசியைச் சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் வலுப்பெறும். எலும்பு முறிவு உள்ளவர்களுக்குச் சாமை அரிசி நல்ல மாற்றத்தைத் தரும்.
ஆண்மை குறைபாட்டை நீக்கும்: (samai millet benefits)
ஆண்களின் இனப்பெருக்க விந்தணுவை அதிகரிக்க செய்யும் ஆற்றலானது இந்த சாமை அரிசியில் உள்ளது. இதன் மூலம் ஆண்மை குறைபாட்டையும் நீக்குவதோடு, தாதுப் பொருட்களை உடலில் அதிகரிக்கச் செய்து உயிரணுக்களின் எண்ணிக்கையைக் கூட்டுகிறது.
உடல் உறுதிக்கு: (samai millet benefits)
பொதுவாகவே சிறு தானியங்களில் இரும்புச்சத்துக்கள் அதிகமாக இருப்பது நமக்குத் தெரிந்ததே. இரத்த சோகை வியாதி இருப்பவர்கள் இந்த சாமை அரிசியைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பயன்பெறலாம். அதே போல இந்த அரிசி சாப்பிட்டு வர உடல் நன்கு உறுதியாகவும் நல்ல ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள்..!
குதிரைவாலி அரிசி’ இதில் என்ன இருக்கிறது?
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் சாமை: (samai rice health benefits)
சாமையில் சாதாரண அரிசியை விட நார்ச்சத்துக்கள் ஏழு மடங்கு அதிகம் உள்ளது. இதன் காரணமாக உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரும் உதவியாக இருக்கிறது. சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் இந்த சாமை அரிசியைச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அளவு குறையும். மேலும் ஆரம்ப நிலையில் உள்ள சர்க்கரை நோயை வராமல் தடுத்து நிறுத்தும்.
மலச்சிக்கல் பிரச்சனை தீரும்: (samai rice health benefits)
சாமை அரிசியைச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து முற்றிலும் விடுபடலாம். மேலும் சாமை அரிசியைச் சாப்பிடுவதால் வயிற்றுச் சம்பந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துவிடும்.
சிறிய குழந்தைகளுக்கு உகந்தது: (samai arisi health benefits)
சளி, ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்குச் சாமை அரிசி சரியான மருந்து என்று சொல்லலாம். அதாவது, இதில் உள்ள போலிக் அமிலம் மூளை வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் உருவாகாமல் தடுக்கிறது. மேலும் இந்த அரிசியில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு நல்ல உடல் வலிமையைத் தரும்.
நல்ல கொழுப்பு: (samai arisi health benefits)
சாமையில் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய கொழுப்புச் சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது. இந்த அரிசியை நாம் உட்கொள்வதால் இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.
ஆக, பல வகையில் பலன்களைத் தரக்கூடிய சிறுதானியமான சாமை அரிசியை வாங்கி சமைத்து சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம்.
அவல் உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
சாமை அரிசியின் பயன்கள் | |
பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி | |
குதிரைவாலி அரிசியில் உள்ள பயன்கள் | |
கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள் | |
சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..! | |
பார்லி அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் | |
கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? | |
தினை அரிசியின் பயன்கள் || Thinai rice | |
‘வெள்ளை சோளம்’ இதன் பயன்கள் தெரிந்து கொள்வோமா? | |
மருத்துவம் குணம் நிறைந்த மூங்கில் அரிசி..! | |
‘கம்பு’ இந்த தானியத்தில் என்ன சத்துகள் உள்ளது தெரியுமா? | |
‘கேழ்வரகு’ இது உடல் எடையை குறைக்க உதவும் தெரியுமா? |
You must log in to post a comment.