சப்ஜா விதையின் மருத்துவ பயன்கள்..!
Sabja Seeds/ Vithaigal Benefits.
வணக்கம் நண்பர்களே சப்ஜா விதையின் பயன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சப்ஜா விதை
இந்த சப்ஜா விதையானது பார்ப்பதற்கு கருப்பு நிறத்தில் எள் போன்று இருக்கும். இது திருநீற்று பச்சை மூலிகை செடியின் விதை. இதைத்தான் சப்ஜா விதை என்று கூறுகிறார்கள்.
ஊட்டச்சத்துக்கள்:
சப்ஜா விதையில் துத்தநாகம், சல்பர், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின், ஒமேகா 3, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு சத்துக்கள், நார்ச்சத்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
சப்ஜா விதையின் பயன்கள்: Sabja Seeds Payangal
- சப்ஜா விதையினை இரவில் படுக்கைக்கு முன் தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்தவுடன் ஊறவைத்த சப்ஜா விதையுடன் பால் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடித்தால் உடல் சூட்டை போக்கும். உடல் சூட்டினால் உண்டாகும் கண் எரிச்சலை குணப்படுத்தும்.
- உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவதுடன் மூல நோய் பிரச்சனை விரைவில் குணமாகும்.
- சப்ஜா விதையில் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனையால் மிகவும் அவதிப்படுபவர்கள் 1 டீஸ்பூன் சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- உடல் எடை அதிகம் உள்ளவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சப்ஜா விதைகளை சாப்பிட்டு வர உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைப்பதுடன் தொப்பையும் குறையும். இந்த சப்ஜா விதையை சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. இதற்கு காரணம் சப்ஜா விதையில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த சப்ஜா விதையினை சாப்பிட்டு வரலாம்.
- சப்ஜா விதை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் தினமும் 1 டீஸ்பூன் சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வர உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
- சப்ஜா விதையில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால் இரத்த சோகை வராமல் பாதுகாக்கும். மேலும் சப்ஜா விதையில் ஒமேகா 3 fatty acids இருப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் சக்தி சப்ஜா விதைக்கு உள்ளது.
- நெஞ்செரிச்சல், அசிடிட்டியால் மிகவும் அவதிப்படுபவர்கள் இரவில் ஊறவைத்த சப்ஜா விதையினை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் ஜீரண பாதையில் உள்ள புண்களை சப்ஜா விதை ஆற்றக்கூடிய தன்மை கொண்டது.
- சிறுநீர் பாதையில் உண்டாகக்கூடிய புண்கள், சிறுநீரக எரிச்சல், சிறுநீர் தொற்று, வயிற்று புண் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த சப்ஜா விதை மிகவும் உதவுகிறது.
- பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அடி வயிற்று வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை சப்ஜா விதை குணப்படுத்தும்.
- மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சப்ஜா விதையை இளநீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நோயின் தாக்கம் குறையும்.
சப்ஜா விதையை எப்படி பயன்படுத்துவது? How to use sabja seeds?
குறைந்தது 4 முதல் 6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறிய சப்ஜா விதையானது நன்கு பூத்து வழவழப்பாக ஜவ்வரிசி போன்று இருக்கும். ஊற வைத்த சப்ஜா விதையுடன் ரோஸ் மில்க், நன்னாரி சர்பத், மில்க் ஷேக், பால், தண்ணீர் இவற்றில் எதில் வேண்டுமானாலும் சேர்த்து குடித்து வரலாம்.
மிக எளிதாக அனைத்து மளிகை அல்லது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கக்கூடிய இந்த சப்ஜா விதையை வாங்கி ஊறவைத்து சாப்பிட்டு நீங்களும் பயனடையுங்கள். இதை மற்றவர்களுக்கு சொல்லுங்கள்.
கிச்சிலி சம்பா அரிசியின் பயன்கள்..! | |
கைக்குத்தல் அரிசியின் பயன்கள்..! | |
காட்டுயானம் அரிசியின் பயன்கள்..! | |
மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..! | |
கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? | |
சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..! | |
கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள் | |
பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி | |
சீரக சம்பா அரிசியின் பயன்கள் |
Keywords: Sabja Seeds, Sabja Vithaigal, Sabja benefits
You must log in to post a comment.