Rs 2 lakh seized

பில்லாங்குளம் அருகே வாகன சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்

330

பில்லாங்குளம் அருகே வாகன சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல். Rs 2 lakh seized

பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வி.களத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பில்லாங்குளம் அருகே துணை தாசில்தார் (கனிமம்) பாக்கியராஜ் தலைமையில், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன், போலீசார் பன்னீர்செல்வம், புவனேஷ்வரி அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாமனந்தல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த விஜயன் (வயது 37) என்பது தெரிய வந்தது. அவரிடம் ரூ.2 லட்சம் இருந்தது. ஆனால், அந்த பணத்தை கொண்டு செல்வதற்கான ஆவணம் அவரிடம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு பெரம்பலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினத்தந்தி

keywords: Rs 2 lakh seized, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்.




%d bloggers like this: