ஆசிரியர் தம்பதி கொரோனா நிவாரண நிதி கொடுத்தனர்.
Retired teacher couple donated corona relief funds.
முதல்-அமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு பெரம்பலூர் கல்யாண் நகரில் வசிக்கும் தம்பதியான ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியை ரெங்கநாயகி ஆகியோர் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியாவை சந்தித்து ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையினை வழங்கினர். இதேபோல அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசித்து வருபவரான தொழிலதிபர் செல்வராஜ் என்பவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் வசதிக்காக ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை வாங்குவதற்காக ரூ.10 லட்சத்து 2 ஆயிரத்தை கலெக்டர் ரமண சரஸ்வதியிடம் வழங்கினார்.
தினத்தந்தி
Keyword: corona relief funds
You must log in to post a comment.