ADVERTISEMENT
blood-donation

மஸ்கட் – ரத்தம் தானம் செய்ய பொதுமக்களுக்கு அழைப்பு

Residents Encouraged to Blood Donation

மஸ்கட் – ரத்த வங்கிகளின் சேவைகள் துறை (The Department of Blood Banks Services (DBBS)) ரத்த தானம் செய்யப் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது. ரத்த சேமிப்பில் கடுமையான பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

DBBS வெளியிட்ட அறிக்கையில், ‘பௌஷரில் உள்ள மத்திய ரத்த வங்கியில் கடந்த வாரம் ரத்த தானம் செய்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போதைய சேமிப்பு நிலையானதாக இருக்கின்றது. இருப்பினும் தானம் செய்பவர்களின் எண்ணிக்கையில் 70% குறைந்துள்ளதால் எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

‘மருத்துவ நிறுவனங்களின் இரத்த தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் இரத்த வங்கி இருக்கிறது. இரத்த தானம் செய்பவர்கள் பௌஷரில் உள்ள மத்திய ரத்த வங்கியில் உடனடியாக இரத்தம் தானம் செய்ய வேண்டுகிறோம்.‘ என்று DBBS தெரிவித்துள்ளது.

இரத்த தானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மற்றும் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை ரத்தம் தானம் செய்யலாம்.

ADVERTISEMENT

Keywords: blood-donation, Oman Tamil News, Muscat Tamil News

Our Facebook Page

ALSO READ:
ஷார்ஜா: கோடை வெயிலுக்கு இலவச மோர் வழங்கி வரும் தமிழர் உணவகம்.
குதிரைவாலி அரிசியின் பயன்கள் மற்றும் நன்மைகள்.!
சிவப்பு அரிசியின் அற்புதமான நன்மைகள்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *