வேப்பந்தட்டை குறுவட்ட அளவில் நடைபெற்ற குடியரசு தின தடகள போட்டிகளில் 100+ மாணவர்கள் பங்கேற்றனர்.
Republic Day Sports Competitions
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற வேப்பந்தட்டை குறுவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான குடியரசு தின தடகள போட்டிகள், மாணவ, மாணவிகளின் உற்சாக பங்கேற்புடன் சிறப்பாக நடந்தேறியது.
மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) லதா, தொடக்க நிகழ்வாக கொடியேற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், கோலுஞ்சித் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் இடம்பெற்றன.
20-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றியாளர்களுக்கு சாம்பியன் பட்டங்கள், தனிநபர் சாம்பியன் பட்டங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் விக்டோரியா மற்றும் சுப்பிரமணியன் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர். நிகழ்ச்சி நிறைவில், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைமகள் நன்றி தெரிவித்தார்.
Sports Competitions, Perambalur District News, Perambalur News, Veppanthattai News
இதையும் வாசிக்கலாம்
அத்திப் பழம்: செரிமானத்திற்கும் ஆரோக்கியத்திற்கும்
பார்லி: நன்மைகள், பக்கவிளைவுகள் மற்றும் சத்துக்கள்