Ramadan fasting

அமீரகத்தில் ரமலான் நோன்பு 14 மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும்..!! 

417

அமீரகத்தில் ரமலான் நோன்பு 14 மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும்..!! Ramadan fasting time more than 14 hours in UAE .. !!

அமீரகத்தில் இவ்வாண்டு புனித ரமலான் மாதம் 30 நாட்களாக இருக்கும் என்று அமீரக வானியல் ஆய்வு மையம் கணக்கிட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 13 செவ்வாய்க்கிழமை ரமலான் நோன்பு துவங்கும் என்று வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் மே 13 வியாழக்கிழமை துவங்கும் என்றும் கணக்கிட்டுள்ளது. இதனால் இந்த வருட ஈத் அல் பித்ர் எனும் நோன்பு பெருநாள் மே 13 ம் தேதி கொண்டாடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும், வானியல் ஆய்வாளர்கள் அமீரகத்தில் இந்த வருடத்திற்கான நோன்பின் நேரத்தையும் தெரிவித்துள்ளனர். அதன்படி, ரமலான் முதல் நாள் அபுதாபியில் அதிகாலை 4.43 மணிக்கு நோன்பு தொடங்கும் மற்றும் இஃப்தார் மாலை 6.47 மணிக்கு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது முதல் நோன்பானது ஒரு நாளில் 14 மணி நேரம் நான்கு நிமிடங்கள் நீடிக்கும் என்று தெரிய வந்துள்ளது. அதே போல், ரமலான் மாதத்தின் 30 ம் நோன்பானது, அதிகாலை 4.15 மணிக்கு தொடங்கி இரவு 7.01 மணிக்கு முடிவடையும் என்றும், இதனால் இறுதி நோன்பானது ஒரு நாளில் 14 மணி முதல் 46 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

our facebook page

Keywords: Ramadan, Ramadan fasting, gulf news, daily gulf news, gcc news tamil, gulf news tamil




%d bloggers like this: