பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை.
Raining in all area of Perambalur district.
பெரம்பலூர் மாவட்டத்தில் சமீப நாட்களாக வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று காலை சிறிது நேரம் வெயில் அடித்தது. அதனைத்தொடர்ந்து இடைவெளிவிட்டு மழை பெய்தது. மழையின் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தற்போது பெய்துவரும் மழை காரணமாக உழவு, விதைப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டின் சராசரி மழை அளவு 861 மி.மீட்டர் ஆகும். ஆனால், பருவமழை காலத்திலேயே 805 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. இது, கடந்த ஆண்டைவிட அதிகமாகும்.
பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரை முந்தைய பருவமழை சீசனின்போது இந்த அளவுக்கு மழை பெய்ததில்லை என்று இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
தினத்தந்தி
Keywords: Raining in all area, Perambalur News
You must log in to post a comment.