2-வது நாளாக குன்னம் பகுதியில் மழை. Rain for the 2nd day in Kunnam area.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் அதிக வெப்பம் நிலவும் பகுதியாக உள்ளது. பகலில் கொளுத்தும் வெயிலால் கடைவீதிகளுக்கு செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை இருந்தது. இதனால் பகல் நேரத்தில் பலர் வெளியில் செல்வதை தவிர்க்கின்றனர். இதனால் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. வேப்பூர், மேலமாத்தூர், புதுவேட்டக்குடி, வயலப்பாடி ஆகிய பகுதிகளிலும் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் குன்னம் பகுதியில் கோடை மழை பெய்தது. இதைத்தொடர்ந்து 2-வது நாளாக நேற்று மதியம் பேரளி, மருவத்தூர், க.எறையூர், புதுவேட்டக்குடி, காடூர், கோவில் பாளையம் ஆகிய கிராமங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
keywords: Rain, Kunnam, குன்னம், Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.