Quarantine reduction

சவூதி வருபவர்களுக்குத் தனிமைப்படுத்துதல் 5 நாட்களாகக் குறைப்பு.

260

சவூதி வருபவர்களுக்குத் தனிமைப்படுத்துதல் 5 நாட்களாகக் குறைப்பு.

Saudi Arabia News: Quarantine reduction to 5 days.

சவூதி அரேபியா நாட்டிற்கு வருகின்ற வெளிநாட்டவர்கள் மற்றும் விசிட்டிங்கில் வரும் நபர்களுக்கும் தனிமைப்படுத்தல் தொடர்பான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று (செப்-13) அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதாவது, தடுப்பூசி எடுக்காத நபர்களோ அல்லது சவுதி அங்கீகாரம் பெற்ற கோவிட் தடுப்பூசியின் ஒரு டோஸ் மட்டுமே எடுத்தவர்களோ சவுதி அரேபியாவுக்கு வந்தால் அவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் நெகட்டிவ் சான்றிதழைப் பயணத்தின் போது உடன் எடுத்துவர வேண்டும்.

ஐந்து நாட்கள் மட்டும் (Quarantine reduction)

சவூதி அரேபியாவில் நுழைந்த பிறகு ஐந்து நாட்கள் மட்டும் தனிமையில் இருத்தல் போதுமானது, ஆனால் ஐந்து நாட்களுக்குள் இரண்டு பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்ய வேண்டும். முதல் பரிசோதனை சவூதி அரேபியாவிற்குள் நுழைத்து 24 மணி நேரத்திற்குள் நடத்தப்பட வேண்டும் மற்றும் இரண்டாவது பரிசோதனை தனிமைப்படுத்தலின் ஐந்தாவது நாளில் எடுக்க வேண்டும். இந்த ஐந்தாவது நாளில் நடத்தப்படும் பரிசோதனையின் முடிவு நெகடிவாக இருந்தால் பயணி தனிமைப்படுத்தலை முடித்துக் கொள்ளலாம்.

இந்த புதிய உத்தரவு வரும் 23-ம் தேதி மதியம் 12 மணி முதல் அமலுக்கு வருகிறது என்று அவ்வரிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நடைமுறை படி சவூதி அரேபியாவில் நுழையும் நபர்களுக்கு ஏழு நாட்கள் கட்டாயமாகத் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Our facebook page

Keywords: Quarantine reduction

English

The Civil Aviation Authority (CAA) said in a statement yesterday (Sep-13) that some changes have been made to the rules regarding segregation for foreigners and visitors to Saudi Arabia.

Persons who have not been vaccinated or who have received only one dose of the Saudi-approved Covid vaccine must bring with them during the trip a negative certificate of PCR test taken within 72 hours if they arrive in Saudi Arabia.

Five days of solitary confinement is sufficient after entering Saudi Arabia, but two PCR tests must be performed within five days. The first test should be performed within 24 hours of entering Saudi Arabia and the second test should be taken on the fifth day of isolation. Passenger isolation can be terminated if the result of the test conducted on this fifth day is negative. The report clarified that the new order will come into effect from 12 noon on the 23rd.

It is noteworthy that according to the current practice, persons entering Saudi Arabia must be in compulsory isolation for seven days.




%d bloggers like this: