ADVERTISEMENT
Qatar Visa Centres Introduce New Services

கத்தார் விசா மையங்களில் புதிய சேவைகள் அறிமுகம்

Qatar Visa Centres Introduce New Services

கத்தார் உள்துறை அமைச்சகம் (The Ministry of Interior (MoI)) புதிய சேவைகளை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையில் இயங்கும் கத்தார் விசா மையங்களில் (QVC) அறிமுகப்படுத்தியுள்ளது.

“தற்காலிக வேலை விசாக்களுக்கு மருத்துவ சேவைகள், பல்முறை நுழைவு வேலை வருகை விசாக்களுக்கு மருத்துவ பரிசோதனை சேவைகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பதாரர்களுக்கான பார்வை பரிசோதனை சேவைகள் தற்போது கிடைக்கின்றன,” என விசா ஆதரவு சேவைகள் (VSS) துறை இயக்குநர் மேஜர் நாசர் அலி அல்-கலாஃப் கூறினார்.

நேற்று (புதன்கிழமை) வாடி அல் பனட்டில் (Wadi Al Banat) உள்ள பொது பாஸ்போர்ட் இயக்குநரகத்தின் தலைமையகத்தில் புதிய QVC சேவைகள் பற்றிய அறிமுக செமினாரில் அவர் பேசினார்.

கத்தாரில் வேலை செய்ய விரும்புபவர்கள் தங்கள் பையோமெட்ரிக் தரவுகளை பதிவு செய்யவேண்டும். வேலை ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும. அதே போல மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும்,” என அல்-கலாஃப் கூறினார்.

ADVERTISEMENT

தற்காலிக வேலை விசா விண்ணப்பதாரருக்கு ஒற்றை நுழைவு வழங்கப்படுகிறது. ஒப்பந்தத்தின் கால அளவை அடிப்படையாகக் கொண்டு 12 மாதங்கள் வரை தங்க அனுமதி உள்ளது. பல்முறை நுழைவு வேலை வருகை விசாக்கள் பல வந்து செல்வதற்கு வழி வகை செய்கிறது. ஒப்பந்தத்தின் கால அளவை அடிப்படையாகக் கொண்டு 12 மாதங்கள் வரை தங்க அனுமதி உள்ளது.

QVC-களின் செயல்பாட்டு முறைமையில், தொடர்புடைய அதிகாரிகளுடன் (பொது போக்குவரத்து இயக்குநரகம், தகவல் தொடர்புத் துறை மற்றும் சேவை வழங்குநர்கள்) இணைந்து பரிசோதனை மையங்களை பொது போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் ஓட்டுநர் பள்ளிகள் மற்றும் நிலையங்களுடன் மின்னணுவாக இணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

QVC களின் செயல்பாட்டின் பின்னணியில், பார்வை சோதனை தரவு கத்தாரின் பொது போக்குவரத்து மற்றும் ஓட்டுநர் பள்ளிகளுக்கு நேரடியாக அனுப்பப்படும். விண்ணப்பதாரர்கள் கத்தாரில் பார்வை சோதனைகளை மீண்டும் எடுக்கத் தேவையில்லை என MoI அதிகாரி விளக்கினார்.

மூன்று நாடுகளில் புதிய QVCகள் திட்டமிடப்பட்டுள்ளன

தகுந்த அதிகாரிகளுடன் இணைந்து கென்யா, இந்தோனேசியா மற்றும் துனீசியாவில் புதிய கத்தார் விசா மையங்களை (QVC) நிறுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விசா ஆதரவு சேவைகள் (VSS) துறை இயக்குநர் மேஜர் நாசர் அலி அல்-கலாஃப் கூறினார்.

ADVERTISEMENT

தற்போது QVCகள் இந்தியாவில் (புது டெல்லி, மும்பை, கொல்கத்தா, லக்னோ, ஹைதராபாத், சென்னை, கொச்சி); பாகிஸ்தானில் (இஸ்லாமாபாத், கராச்சி); பங்களாதேஷில் (டாக்கா, சில்ஹெட்); நேபாளில் (காத்மாண்டு); பிலிப்பைன்சில் (மணிலா); மற்றும் இலங்கையில் (கொழும்பு) ஆகிய இடங்களில் செயல்படுகின்றன.

தற்போது, விண்ணப்பதாரர்கள் ஆவணத்தைச் சான்றிதழ் (Document attestation) செய்யுதல், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல், பையோமெட்ரிக் பதிவு மற்றும் மருத்துவ பரிசோதனை போன்ற சேவைகளை QVC அப்ளிகேஷனில் பெற முடியும். ஆங்கிலம் மற்றும் அரபியுடன், QVC ல் விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மொழிகளில் சேவைகளை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Keywords: Qatar Visa Centres, Gulf Tamil News, Qatar Tamil News, GCC Tamil News,

அமீரக செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.

Our Facebook Page

ADVERTISEMENT

ALSO READ:
துபாய்: புறக்கணிக்கப்பட்ட வாகனங்களை அகற்ற உத்தரவு
துபாய் டிசர்ட் சபாரி பற்றி தெரியுமா?
துபாயிலிருந்து ஹட்டாவுக்கு பஸ்சில் பயணம்
UAE: வெள்ளிக்கிழமை தொழுகை சிறப்புப் பிரசங்க நேரம் குறைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *