ADVERTISEMENT
Subsidised Sheep for Eid Al Adha Now on Sale

Qatar: மானியத்துடன் கூடிய குர்பான் ஆடுகள் விற்பனை

Qatar: Subsidised Sheep for Eid Al Adha Now on Sale

கத்தாரில் மானியத்துடன் கூடிய ஈத் அல் அதாவிற்கு பலியிடும் செம்மறியாடுகள் விற்பனை இன்று தொடங்கியது.

தோஹா, கத்தார்: வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MoCI), நகராட்சி அமைச்சகம் மற்றும் விடம் உணவு நிறுவனத்துடன் (Widam Food Company) இணைந்து, உள்ளூர் செம்மறி விவசாயிகளுக்கு உதவவும், ஈத் அல் அதா 2024 க்கு செம்மறி இறைச்சி விலையை குறைவாக வைத்திருக்கவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த முன்முயற்சி இன்று ஜூன் 9 ஆம் தேதி தொடங்கி ஜூன் 19, 2024 புதன்கிழமை வரை இயங்கும். இந்தத் திட்டத்தின் கீழ், இரண்டு வகையான செம்மறி ஆடுகள் கிடைக்கின்றன:

உள்ளூர் செம்மறி ஆடுகள் (40கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட எடையுள்ளவை) ஒவ்வொன்றும் QR1,000. இறக்குமதி செய்யப்பட்ட செம்மறி ஆடுகள் (40கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட எடையுள்ளவை) ஒவ்வொன்றும் QR1,000.
மானியத்துடன் இந்த ஆடுகளை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கத்தார் குடிமக்கள் மட்டுமே வாங்க முடியும். ஒவ்வொருவருக்கும் ஒரு செம்மறி ஆட்டை வாங்கலாம். கத்தார் ஐடி (QID) யை விடம் ( Widam) விற்பனை நிலையங்களில் காண்பித்து வாங்கலாம். ஆடுகள் கிடைக்கும் இடங்கள் வருமாறு.

ADVERTISEMENT

அல் ஷமல்,
அல் கோர்,
உம்மு ஸலால்,
அல் வக்ரா,
அல் ஷீஹாபியா,
அபு நக்லா

ஆடுகள் பலியிட்டு சுத்தம் செய்து உங்கள் வாகனங்களில் இறைச்சியை எடுத்துச் செல்வதற்கு QR50 கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

ஈத் அல் அதாவின் போது செம்மறி ஆட்டின் இறைச்சியின் விலையை நிலையானதாகவும் மலிவு விலையிலும் வைத்திருப்பதற்காக இந்த திட்டத்தை அரசு துவக்கியுள்ளது. இதன் மூலம் விநியோகம் மற்றும் தேவையை சமநிலைப்படுத்துதல் மற்றும் இறைச்சியின் திடீர் விலை உயர்வைத் தடுப்பதும் குறிக்கோள் ஆகும். மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள, விடம் உணவு நிறுவனத்தை (Widam Food Company) 8000056 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Our Facebook Page

ALSO READ:
ஈத் அல் அதா விடுமுறையை கொண்டாட எட்டு கடற்கரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஹஜ்ஜின் போது சராசரிக்கும் அதிகமான வெப்பம் இருக்கும் என எச்சரிக்கை!

ADVERTISEMENT

Keywords: Qatar Tamil News, Gulf News Tamil, GCC Tamil News, Subsidised Sheep, Doha News Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *