கத்தார் கொரோனா நிலவரம் (03.08.2020)
Qatar News: Qatar Corona Status (03.08.2020)
கத்தாரில் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,11,322 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இன்று மட்டும் ஒரு மரணத்துடன் புதியதாக 215 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது சம்பந்தமாக கத்தார் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கொரோன நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் 5,02,792 பேர் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 1,11,322 நபர்கள் மட்டும் கொரோனா தெற்றினால் பாதிக்கப்பட்டவர்களாக இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரேனா நோய்த்தொற்றால் இது வரை 177 பேர் மரணடைந்துள்ளனர். 1,08,002 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.
Gulf Tamil News:
மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்சனைகளை 16000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு கத்தார் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
keyword: Qatar News, COVID-19
You must log in to post a comment.