ADVERTISEMENT
Qatar Airways launches first direct flight to Uzbekistan

கத்தார் ஏர்வேஸ் உஸ்பெகிஸ்தானுக்கு முதல் நேரடி விமானம் அறிமுகம்.

Qatar Airways launches first direct flight to Uzbekistan

கத்தார் ஏர்வேஸ் உஸ்பெகிஸ்தானுக்கு முதல் நேரடி விமானத்தை துவக்கியுள்ளது. இது இருதரப்பு உறவுகளில் புதிய சகாப்தமாக கருதப்படுகிறது.

கத்தார் ஏர்வேஸ் தனது முதல் நேரடி விமானத்தை உஸ்பெகிஸ்தானின் தலைநகரான தாஷ்கண்டிற்கு துவக்கியுள்ளது. இது கத்தார் மற்றும் உஸ்பெகிஸ்தானுக்கு இடையிலான உறவில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக கருதப்படுகிறது. 1997 இல் துவங்கிய உறவில் இது அடுத்த கட்ட நகர்வை நோக்கி எடுத்து வைப்பதாக தெரிகிறது.

இந்த புதிய விமானப் பாதை வணிக வாய்ப்புகளை அதிகரிக்கும் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலா மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கத்தார் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் (QCAA) மேலாளர் முகமது பின் ஃபலே அல் ஹஜ்ரி, இந்த விமானங்கள் இருதரப்பு சுற்றுலா மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

கத்தாரின் தொழிலாளர் அமைச்சர் அலி பின் ஸ்மைக் அல் மர்ரி, உஸ்பெகிஸ்தானின் வேலைவாய்ப்பு மற்றும் வறுமைக் குறைப்பு அமைச்சரைச் சந்தித்து தொழிலாளர் துறை ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார். இரு நாடுகளுக்கிடையே தொழிலாளர் உறவுகள் மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கு இது ஏதுவாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT

1997 முதலே கத்தாருக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான உறவு தொடர்ச்சியான வளர்ச்சியைக் கண்டது. கடந்த ஆண்டு அதாவது ஜூன் 2023 ல், கத்தாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி மத்திய ஆசியாவிற்கு ஒரு வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அந்த பயனத்தை உஸ்பெகிஸ்தானில் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயனத்தில் டிப்லமேட்டிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு பயண விசா தேவைகளில் இருந்து விலக்கு மற்றும் மேம்பட்ட வர்த்தக ஒத்துழைப்பு உட்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், கத்தார் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு உஸ்பெகிஸ்தானுக்கு 30 நாட்கள் வரை வருகைக்கான நுழைவு விசா தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது பயணம் மற்றும் வணிகத்தை மேலும் எளிதாக்குகிறது. கூடுதலாக, இரட்டை வரி விதிப்பை நீக்குதல், சுங்கத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பில் ஒத்துழைத்தல் போன்ற ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

ஏப்ரலில், இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களுக்கிடையில் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவை நிறுவுதல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்தும் முயற்சிகளை முறைப்படுத்தியது.

நேரடி விமானங்கள் மற்றும் இந்த ஒப்பந்தங்கள் கத்தாருக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையில் வளமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது.

Keywords: Qatar Airways, Qatar News Tamil, Qatar Tamil news, GCC Tamil News

ADVERTISEMENT

Our Facebook Page

இதையும் வாசிக்கலாம்:
ஜுன் 1 முதல் யூஸ் அன் த்ரோ பைகளுக்கு தடை
கருப்பு கவுனி அரிசியின் மகத்துவமிக்க பலன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *