Modernized Emergency Unit

கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல்

283

கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல். Public road blockade in protest of the joint drinking water project.

மங்களமேடு அருகே கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு வெள்ளாற்றில் தண்ணீா் எடுக்க எதிா்ப்பு தெரிவித்து, 3 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம், கீழக்குடிகாடு கிராமத்தில் வெள்ளாற்றில் ராட்சத ஆழ்துளைக் கிணறு அமைத்து நன்னை, வேப்பூா், அகரம் சீகூா் உள்பட 72 பகுதிகளுக்கு குடிநீா் கொண்டுச் செல்ல தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கீழக்குடிகாடு, லப்பைக்குடிகாடு, பெண்ணகோணம் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கீழக்குடிகாட்டில் திருமாந்துறை – அகரம் சீகூா் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் குடிநீா் வடிகால் வாரியம், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Keywords; Public road blockade, drinking water project, protest, Labbaikkudikadu




%d bloggers like this: