தெருக்குழாய்களில் குடிநீர் வினியோகம் இல்லை; பொதுமக்கள் சிரமம். Public inconvenience.
கடந்த 2 நாட்களாக வீடு, தெருக்குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட நோவா நகரில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக இந்த பகுதியில் வீடு மற்றும் தெருக்குழாய்களில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பகுதியில் குழாய்கள் அமைத்து, அங்கு பொதுமக்கள் தண்ணீர் பிடித்து செல்ல ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனால் அங்கு ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் குடங்களுடன் வந்து கூட்டமாக நின்று, தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இதனால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கொரோனா பரவல் மற்றும் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க, வீடு மற்றும் தெருக்குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Keywords: Public inconvenience, குடிநீர்,
You must log in to post a comment.