Prosecution of 26 people on both sides

பைக்குகளுக்கு தீ வைப்பு சம்பவத்தில் இருதரப்பை சேர்ந்த 26 பேர் மீது வழக்கு.

340

பைக்குகளுக்கு தீ வைப்பு சம்பவத்தில் இருதரப்பை சேர்ந்த 26 பேர் மீது வழக்கு.

Prosecution of 26 people on both sides.

மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு சம்பவத்தில் இருதரப்பை சேர்ந்த 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த அரும்பாவூரில் உள்ள பெரிய ஏரியில் உள்நாட்டு மீனவர் சங்கம் சார்பில் மீன் வளர்ப்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் குத்தகைக்கு பதிவு செய்து ஏலம் எடுத்தனர். பின்னர் இந்த ஏரியில் லட்சக்கணக்கான மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்தனர். மேலும் கடந்த ஒரு மாதமாக மீன்களை பிடித்து விற்பனை செய்து வந்தனர். இன்னும் ஏரியில் பெருமளவு மீன்கள் பிடிக்கப்படாமல் உள்ளது.

நேற்று முன்தினம் அந்த ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெறுவதாக மர்ம நபர்கள் பரப்பிய வதந்தியை நம்பி, அரும்பாவூர், பூலாம்பாடி, தொண்டமாந்துறை, பெரியம்மாபாளையம் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து ஏரியில் திடீரென இறங்கி மீன்பிடிக்க தொடங்கினர்.

இதனை கண்ட குத்தகை எடுத்த மீனவர் சங்கத்தினர் அங்கு யாரும் பிடிக்கக் கூடாது என்று கூறினார்கள். ஆனால் அதனை பொதுமக்கள் யாரும் கேட்காமல் ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர். அப்போது மீன்பிடிக்க வந்தவர்கள் ஏரிக்கரையில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினார்கள்.

இதில் 7 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து எலும்புக்கூடு போல் ஆனது. இதையடுத்து அங்கு வந்த போலீசார், பொதுமக்களை கலைந்து போகச்செய்தனர். அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? மீன்பிடித் திருவிழா நடைபெறுகிறது என வதந்தி பரப்பியவர்கள் யார்? என்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து வாகனங்களுக்கு தீ வைத்ததாக மீனவர் சங்கத்தினர் தரப்பில் ரவி, கோபி, ராமு, கணேசன், பாண்டியன் உள்பட 9 பேர் மீதும், மீன்பிடி திருவிழா நடைபெறுவதாக வதந்தி பரப்பி ஏரியில் இறங்கி மீன் பிடித்தவர்கள் தரப்பில் மணிகண்டன், ரமேஷ், தினகரன், முருகேசன், செல்வகுமார் உள்பட 17 பேர் மீதும் என மொத்தம் 26 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

Our Facebook Page

Keyword: Prosecution of 26 people.




%d bloggers like this: