பயணிகளின் கவனத்திற்கு, அமீரகத்திற்கு எதை கொண்டு வரக்கூடாது தெரியுமா? Prohibited substances in UAE
ஐக்கிய அரபு அமீரகத்தின் சுங்க ஆணையம் (Federal Customs Authority – FCA) அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்ளும்போது தங்களுடன் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான GCC ஒருங்கிணைந்த சுங்கச் சட்டத்தை கண்டிப்பாக பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை தொடருமாறு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கடந்த மார்ச் 27-ம் தேதி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு அவர்களுடன் எடுத்து செல்லும் பொருட்கள் மற்றும் பணத் தொகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் எவை அனுமதிக்கப்படும் மற்றும் எதற்கு தடை விதிக்கப்படும் என தெளிவாக விளக்கியுள்ளது.
மேலும் இது தொடர்பான ஒரு விழிப்புணர்வு காணொளியை அரபு, ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மூன்று மொழிகளில் அதன் பல்வேறு சமூக ஊடக தளங்களிலும், அதன் வலைத்தளமான www.fca.gov.ae என்ற லிங்கிலும் GCC ஒருங்கிணைந்த சுங்க சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சுங்க சட்ட விதிமுறைகளை பயணிகளின் விழிப்புணர்விற்காக ஒளிபரப்பியுள்ளது.
அனுமதிக்கப்பட்ட பொருட்கள்…
அனுமதிக்கப்பட்ட பொருட்களில் மூவி ப்ரொஜெக்க்ஷன் சாதனங்கள், ரேடியோ மற்றும் சிடி பிளேயர்கள், டிஜிட்டல் கேமராக்கள், டிவி மற்றும் ரிசீவர் (ஒவ்வொன்றிலும் ஒன்று), தனிப்பட்ட விளையாட்டு உபகரணங்கள், சிறிய கணினிகள், பிரின்டர்ஸ் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான மருந்துகள் ஆகியவைகள்.
மேலும் பயணிகளுடன் கொண்டு வரப்படும் பரிசுகளின் மதிப்பு 3,000 திர்ஹமிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், சிகரெட்டுகள் அனுமதிக்கப்பட்ட வரம்பை (200 சிகரெட்டுகள்) தாண்டக்கூடாது என்றும் ஆணையம் கூறியுள்ளது. கூடுதலாக, புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானங்களை 18 வயதுக்கு குறைவான பயணிகள் கொண்டு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
தங்களுடன் எடுத்துச்செல்லும் அனுமதிக்கப்பட்ட பணத் தொகைகளைப் பொறுத்தவரை, நாட்டிற்கு வரும் அல்லது புறப்படும் அனைத்து பயணிகளும் தாங்கள் வைத்திருக்கும் ஏதேனும் நாணயங்கள், உரியவருக்கு செலுத்த வேண்டிய பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் மற்றும் / அல்லது 60,000 திர்ஹமிற்கும் அதிகமான மதிப்புள்ள கற்களின் உலோகங்களை எடுத்து செல்பவர்கள் அதன் விபரங்களை சுங்க அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையம் கூறியுள்ளது.
தடைசெய்யப்பட்ட பொருட்கள்…
தடைசெய்யப்பட்ட சில பொருட்களில் போதைப்பொருள், சூதாட்ட கருவிகள் மற்றும் இயந்திரங்கள், நைலான் மீன்பிடி வலைகள், உயிருள்ள பன்றி இன விலங்குகள், மூல தந்தங்கள், சிவப்பு விளக்கு தொகுப்பு கொண்ட லேசர் பேனாக்கள், போலி மற்றும் கள்ள நாணயம், அசுத்தமான கதிர்கள் மற்றும் தூசி, வெளியீடுகள், படங்கள், மதரீதியாக தாக்குதல் அல்லது ஒழுக்கக்கேடான வரைபடங்கள் மற்றும் கல் சிற்பங்கள், அத்துடன் வெற்றிலை உள்ளிட்ட பான் பொருட்கள் போன்றவற்றை எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல தடைசெய்யப்பட்ட பொருட்களில் குறிப்பிட்ட சில பொருட்கள் தகுதிவாய்ந்த அதிகாரிகளின் ஒப்புதலைத் தொடர்ந்து நாட்டிற்குள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. அதாவது நேரடி விலங்குகள், தாவரங்கள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள் மற்றும் பட்டாசுகள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகள், ஊடக வெளியீடுகள் மற்றும் தயாரிப்புகள், புதிய வாகன டயர்கள், டிரான்ஸ்மிஷன் மற்றும் வயர்லெஸ் சாதனங்கள், மது பானங்கள், அழகுசாதன பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், மூல வைரங்கள் மற்றும் புகையிலையிலிருந்து தயாரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட சிகரெட்டுகள் போன்றவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அபராதங்கள்…
அனுமதிக்கப்படாத பொருட்களை அதிகாரிகளுக்கு தெரியாமல் கடத்தி செல்ல முற்பட்டு சிக்கிய பயணிகளுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்பதை FCA வலியுறுத்தியுள்ளது.
மேலும் FCA பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை ஒன்றையும் அறிவுறுத்தியுள்ளது. அதாவது பயணிகள் புறப்படும் நாட்டில் தெரியாத நபர்களிடமிருந்து சாமான்கள் அல்லது பைகள் பெறுவதைத் தவிர்ப்பது, அவற்றில் இருக்கும் பொருட்கள் பற்றிய தெளிவு இல்லாமல் நண்பர்களுடன் சாமான்களை பரிமாறிக்கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளது.
keywords: Prohibited substances, gulf news, daily gulf news, gcc news tamil, gulf news tamil,