பெரம்பலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்.
Private employment camp.
பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 29) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறிதத்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இம் மாவட்டத்தைச் சோ்ந்த சிறு, குறு மற்றும் தனியாா்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பணியிடங்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் தகுதியானவா்களை தோ்வு செய்யவுள்ளன.
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் கலந்துகொள்ளலாம். இதில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
மேலும், ஆசிரியா், ஓட்டுநா் பணியிடங்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்புப் பெறலாம்.
தினமணி
Keywords: Private employment camp, Perambalur news, Perambalur District news
You must log in to post a comment.