Prisoners Released ahead of Eid al-Adha
அமீரகத்தில் ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்கும் உத்தரவை அமீரக தலைவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, இந்த ஈத் அல் அதாவை முன்னிட்டு சிறைக் கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவை அமீரக தலைவர்கள் பிறப்பித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியான தகவலின் படி, ஈத் அல் அதாவை முன்னிட்டு, 1,138 கைதிகளை சிறையில் இருந்து விடுவிக்க ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் பல்வேறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை பெற்றவர்கள் ஆவர். ஜனாதிபதியின் இந்த உத்தரவு கைதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து அபராதங்கள் மற்றும் தண்டனைகளையும் உள்ளடக்குவதாகும்.
இதேபோல், துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் ஈத் அல் அதாவை முன்னிட்டு 686 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா உள்ளிட்ட பிற மாநில தலைவர்களும் ஈத் அல் அதாவை முன்னிட்டு சிறைக் கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Keywords: Prisoners Released, Eid Al Adha, UAE news Tamil, UAE Tamil news, GCC tamil news
ALSO READ:
ஈத் அல் அதா: துபாயில் 7 பீரங்கி முழக்க இடங்கள்
துபாய்: ஈத் பெருநாள் இலவச பார்க்கிங் மற்றும் மெட்ரோ நேரங்கள் அறிவிப்பு
பரபரப்புடன் காணப்படும் துபாய் விமான நிலையம்.
அமீரகத்தில் ஈத் அல் அதா தொழுகை நேரம் அறிவிப்பு