கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையங்களில் நாளை மின் நிறுத்தம்.
Power outage tomorrow.
தேனூர்- கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையங்களில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தேனூர் மற்றும் கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர், ஆர்.எஸ். மாத்தூர், கே.ஆர். நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி மற்றும் கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை குன்னம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தினத்தந்தி
Keywords: Power outage tomorrow, Perambalur News
You must log in to post a comment.