நாளை பேரளி பகுதியில் மின் நிறுத்தம். Power outage tomorrow in Perali area
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. எனவே பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, அசூர், சித்தளி, பீல்வாடி, குரும்பாபாளையம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கே.புதூர், வாலிகண்டபுரம், செங்குணம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
keywords: Power outage tomorrow, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.