பெரம்பலூா் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நாளை (மார்ச் 2) மின் தடை. Power outage in Perambalur.
பெரம்பலூா் தானியங்கி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பலூா் பழைய, புறநகா் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகா், நான்குச்சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூா் சாலை, ஆலம்பாடி சாலை, அரணாரை, கே.கே. நகா், அண்ணா நகா், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகா், காவலா் குடியிருப்பு, எளம்பலூா் மற்றும் சமத்துவபுரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது’ என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் பெரம்பலூா் உதவிச் செயற்பொறியாளா் து. முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாா்.
keywords: Power outage, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.