பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி | Poongar arisi Benefits
பூங்கார் அரிசியிலுள்ள (Poongar Rice) மருத்துவ பயன்கள் பற்றி இந்தப்பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
மாப்பிள்ளைச் சம்பா அரிசி எப்படி மாப்பிள்ளைகள் பயன்படுத்து எப்படி உகந்ததோ அதே போல இந்த பூங்கார் அரிசி பெண்களுக்கு உகந்தது. அதனால் தான் நான் இந்த பதிவிற்குப் பூங்கார் அரிசி பூவையருக்கானது என்று தலைப்பு கொடுத்துள்ளேன்.
நமது மூதாதையர்கள் பயன்படுத்திய உணவு முறைகள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியதாகத்தான் இருந்திருக்கிறது. அவர்கள் உண்ட அரிசிகள் எல்லாம் அவ்வளவு மருத்துவ குணங்களை அள்ளி அள்ளி தந்ததாகக் கூறியுள்ளனர். அதன் காரணமோ என்னவோ அவர்களின் வாழ்நாள் முழுவதும் திடகாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். நாம் தான் பட்டை தீட்டப்பட்டு பளபளப்பான அரிசிகளைச் சாப்பிட்டு நோய்களோடு போராடி வருகிறோம். இதன் காரணமாகப் பலரும் இப்போது பாரம்பரிய அரிசியை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் பலரும் பாரம்பரிய அரிசியின் நன்மைகள் பற்றித் தேட ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்காக இந்த பூங்கார் அரிசியின் பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பூங்கார் அரிசி: Poongar Rice
- பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றான பூங்கார் வறண்ட நிலம் மற்றும் சிறிய நீர்த் தேக்கம் போன்ற நிலைகளிலும் வளரக் கூடியது.
- உடல் ஹார்மோன்களில் எந்தவித மாற்றங்கள் உண்டானாலும் அதைத் தடுப்பதற்கும் அதே நேரத்தில் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கான சத்தும் இதில் அதிக அளவு இருப்பதினால் இந்த பூங்காரை “பூவையருக்கான அரிசி” என்று சொன்னால் அது மிகையாகாது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு: (For pregnant women)
- கர்ப்ப காலத்தில் பெண்களுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதில் இருப்பதால் கருவின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- இந்த அரிசியை உண்டு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டு.
- பாலூட்டும் பெண்களுக்குத் தாய்ப்பால் சுரக்கவும் இந்த பூங்கார் அரிசி உதவி செய்கிறது.
- இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், பிறக்கும் குழந்தையும் (Healthy Baby) ஆரோக்கியமாக இருக்கும்.
- பூப்பெய்தும் காலங்களில் இந்த அரிசியில் புட்டு செய்து சாப்பிட்டுவர, இடுப்பு, வயிறு, கால் வலி நீங்கும்.
இதிலுள்ள சத்துக்கள்: (poongar rice)
ஜிங்க், அயன், வைட்டமின் பி1, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்டி ஆக்சிடன்ட், தயாமின் போன்ற சத்துக்கள் இதில் உள்ளது.
- வைட்டமின் பி1 இந்த அரிசியில் இருப்பதனால் அல்சரை குணப்படுத்த உதவுகிறது.
- ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவுகிறது.
- இந்த அரிசியைக் கொண்டு சமைத்த உணவைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதன் காரணமாகச் செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
- குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுக்கவும் உதவுகிறது.
- ரத்தநாளங்களில் உள்ள கொழுப்புகளை நீக்க வல்லது, மேலும் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது.
- உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.
- உடற்பருமன் குறைக்கும், தேவையான நேரத்தில் பசி எடுக்கும்.
- இந்த உணவின் முக்கியத்துவமாக பார்க்க வேண்டியவையில் ஒன்று உணவு உட்கொண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவினை அதிகப்படுத்தாமல் பார்த்துக்கொள்கிறது, மேலும் வியர்வை சுரப்பிகளை தூண்டுவதால் வியர்வை வெளியேற்றம் நடக்கிறது
- இந்த உணவினை பழையசோறு அல்லது நீராகாரம் உட்கொள்ளும் போது, நமக்கு தேவையான வைட்டமின் B கிடைக்கிறது.பக்கவாத நோய்க்கு எதிரானது, (வரும் முன் அல்லது வந்த பின் பாதுகாக்கின்றது)
- அரிசியின் சிவப்பு நிறத்திற்கு, இதனுள் உள்ள அந்தோ சின்னானின் காரணமாகும், மேலும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால், நமது உடலில் பிரீ ராடிசல்ஸ் ஏற்படும் பாதிப்பினை போக்கவல்லது.
- பரம்பரை நோயின் தாக்கம் மற்றும் celiac diseases நமது உடலில் இருந்து குறைக்க அல்லது வராமல் செய்ய உதவும்
- இந்த வகை அரிசியை மற்ற அரிசியோடு ஒப்பிடும்போது, இரும்பு, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் அதிக அளவில் உள்ளது. இது ஒரு அபாரமான சுவையை பெற்றுள்ளது.
- ரத்தநாளங்களில் உள்ள கொழுப்புகளை நீக்க வல்லது, மேலும் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது
- உடற்பருமன் குறைக்கும், தேவையான நேரத்தில் பசி எடுக்கும்.
பெண்களின் உடல் நலனில் அக்கரை கொண்டு அவர்களின் உடல் நலம் சீராக இருப்பதற்கும், தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்கவும் நமது முன்னோர்கள் பெரிதும் பயன்படுத்தி வந்த அரிசி வகைகளில் இந்த பூங்கார் அரிசி மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது.
இந்த பூங்கார் அரிசி தற்போது கிலோ 60 ரூபாய் முதல் 75 வரை கிடைக்கிறது. நன்மைகளைத் தரும் இந்த அரிசியை நீங்களும் பயன்படுத்திப் பாருங்களேன்.
நல்லதை உண்டு நலமாக வாழ்வோம்.
அவல் உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
சாமை அரிசியின் பயன்கள் | |
பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி | |
குதிரைவாலி அரிசியில் உள்ள பயன்கள் | |
கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள் | |
சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..! | |
பார்லி அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் | |
கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? | |
தினை அரிசியின் பயன்கள் || Thinai rice | |
‘வெள்ளை சோளம்’ இதன் பயன்கள் தெரிந்து கொள்வோமா? | |
மருத்துவம் குணம் நிறைந்த மூங்கில் அரிசி..! | |
‘கம்பு’ இந்த தானியத்தில் என்ன சத்துகள் உள்ளது தெரியுமா? | |
‘கேழ்வரகு’ இது உடல் எடையை குறைக்க உதவும் தெரியுமா? |
Keywords: Poongar arisi, Poongar rice benefits, poongar rice
You must log in to post a comment.