Philippines Cancels 29 Flights Due to Volcano Eruption
பிலிப்பைன்ஸில் உள்ள கன்லான் எரிமலை வெடித்ததால், நினோய் அக்கினோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து (NAIA) 29 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த எரிமலை வெடிப்பினால் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு இதன் சாம்பல் மற்றும் வெப்ப ஆவி சிதறியதாக தகவல் தெரிவிக்கின்றன.
திங்கட்கிழமை இரவு, பிலிப்பைன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் வோல்கானாலஜி அண்ட் சீஸ்மோலஜி (Phivolcs) எச்சரிக்கை செய்தது. நிலை 1ல் இருந்து இரண்டாம் நிலைக்கு உயர்ந்ததாக எச்சரித்தது. ஆறு நிமிடங்கள் கன்லான் மலையில் எரிமலை வெடிப்புக்குப் பிறகு இந்த எச்சரிக்கை அறிவித்தது.
எரிமலை உச்சிக்கு அருகில் பறப்பதை தவிர்க்குமாறு விமானிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் எரிமலையின் சாம்பல் மற்றும் வெப்ப குழம்புகள் ஆபத்தானவை.
மற்றொரு செய்தியில், இந்தோனேசியாவின் மவுண்ட் இபு எரிமலை செவ்வாயன்று வெடித்து. ஐந்து கிலோமீட்டர் (மூன்று மைல்) தூரத்திற்கு அடர்த்தியான சாம்பல் பரவியது. அங்கிருந்து மக்கள் வெளியேற்றியது சம்மந்தமாக எதுவும் தகவல்கள் இல்லை. ஆனால் பள்ளத்தில் இருந்து ஏழு கிலோமீட்டர் (4.4 மைல்) வரை மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
இதையும் வாசிக்கலாம்:
கத்தார் ஏர்வேஸ் உஸ்பெகிஸ்தானுக்கு முதல் நேரடி விமானம் அறிமுகம்.
ஜுன் 1 முதல் யூஸ் அன் த்ரோ பைகளுக்கு தடை
கருப்பு கவுனி அரிசியின் மகத்துவமிக்க பலன்கள்
Keyword: Volcano Eruption,