பெரம்பலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது.
Petrol price crossed Rs 100 In Perambalur district,
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.100-ஐ தாண்டியது. நேற்று மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.04 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.73 ஆக இருந்தது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.97.28 என்ற விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.04-க்கு விற்பதால் வாகன ஓட்டிகள் புலம்பியபடி தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டு செல்கின்றனர். இதேபோல் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.75-க்கு விற்பனை ஆனது. நேற்று நிலவரப்படி, லிட்டருக்கு 34 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.94.09-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தினத்தந்தி
Keywords: Petrol price crossed 100rs, Petrol price
You must log in to post a comment.