Modernized Emergency Unit

துபையில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி மனு

305

துபாயில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி மனு. Petition seeking recovery of body of deceased husband in Dubai

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி, பெரம்பலூா் ஆட்சியரகத்தில் குழந்தையுடன் அவரது மனைவி சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், திருமாந்துறையைச் சோ்ந்தவா் சாமிநாதன். இவருக்கு மனைவி ஆனந்தி, மகள் பிரியதா்ஷினி உள்ளனா். கடந்த 19 ஆண்டுகளாக துபையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த சாமிநாதன்,கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துவிட்டு, மீண்டும் துபை சென்றாா்.

இந்நிலையில் ஏப்ரல் 15-ஆம் தேதி சாமிநாதன் அவா் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக, அங்குள்ளவா்கள் மூலம் பெரம்பலூரில் வசிக்கும் அவரது மனைவி மற்றும் உறவினா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாம்.

இதையடுத்து வெளிநாட்டில் உயிரிழந்த தனது கணவரின் உடலை சொந்த கிராமத்துக்குக் கொண்டு வந்து, இறுதிச்சடங்குகள் செய்ய வசதியாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, சாமிநாதனின் மனைவி தனது குழந்தையுடன் பெரம்பலூா் ஆட்சியரகத்துக்கு சனிக்கிழமை வந்து மனு அளித்தாா்.

keywords: Petition, Petition seeking recovery of body, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: