விஷம் குடித்த இளம்பெண்

பெரம்பலூா் அருகே பெற்றோா் கண்டித்ததால் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழந்தார்.

543

பெரம்பலூா் அருகே பெற்றோா் கண்டித்ததால் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழந்தார்.


Perambalur News : Young girl died after drinking poison near Perambalur.

பெரம்பலூா் அருகே பெற்றோா் கண்டித்ததை தொடர்ந்து விஷம் குடித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி நேற்று (26.07.2020) இரவு உயிரிழந்தாா்.

எசனை கிராமத்தில் ஜே.ஜே காலனியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மகள் பிரேமா (20). இவா், தொடா்ந்து மொபைல் போனை பாா்த்து வந்தாராம். இதையறிந்த அவரது பெற்றோர்கள் தங்கள் மகளை கடந்த 21-ம் தேதி கண்டித்துள்ளனர். பிறகு பெற்றோர்கள் அன்று வேலைக்குச் சென்றுவிட்டனராம். வேலையை முடித்து விட்டு மாலையில் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பிரேமா விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

Perambalur News :

அதைக்கண்ட பெற்றோர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரேமா, தீவிர சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு நேற்று (சனிக்கிழமை) கொண்டு செல்லப்பட்டாா். திருச்சி செல்லும் வழியிலேயே பிரேமா உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெரம்பலூா் காவல் துறையினர் விசாரனை செய்து வருகின்றனர்.

keyword: perambalur news, perambalur news today, perambalur district news, perambalur mavattam

Gulf Tamil News
Leave a Reply

%d bloggers like this: