black badge

தமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.

136

தமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.


Perambalur News: Working wearing a black badge condemning the TN government.


சுதந்திர தின விழாவில் தொடர் மீட்புப் பணிகளில் பணிபுரிந்தோருக்கு வழங்கப்படும் விருதுகளில் ஊரக வளர்ச்சித் துறையினரை முற்றிலும் புறக்கணித்ததால் பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களிலும் தமிழக அரசை கண்டித்து 148 பேர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தனர்.

இன்று (15-ம் தேதி) நடைபெறும் நாட்டின் 74 ஆவது சுதந்திர தின விழாவில் கொரோனா பேரிடர் மீட்புப் பணிகளில் களப்பணியாளர்களாக பணி ஆற்றிய வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி,பேரூராட்சி ஊழியர்களுக்கு தமிழக முதல்வரால் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த விருதுக்கான பட்டியலில் ஊரக வளர்ச்சித் துறையினர் யாருடைய பெயரும் இடம் பெற வில்லை இதனால் தமிழக அரசை கண்டித்து நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையினர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தனர்.

Perambalur News:

இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி உள்ளிட்ட 39 பேர்களும், வேப்பூர் ஒன்றிய வட்டாரா வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், ஸ்டாலின் செல்வக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார், சித்தார்த்தன், உள்ளிட்ட 42 பேர்களும், ஆலத்தூர் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, இலட்சுமி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உள்ளிட்ட 36 பேர்களும், வெப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இமயவரம்பன், அறிவழகன்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 31 வரும் என பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஒன்றியங்களில் மொத்தம் 148 தமிழக அரசு 148 பேர் தமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தனர்.

keyword: Perambalur News




Leave a Reply

%d bloggers like this: