பெரம்பலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை.

476

பெரம்பலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை.

துறையூர் தாலுகா பெருமாள்பாளையம் நாயுடு தெருவை சேர்ந்தவர் கண்ணன் இவர் சேலம் மாவட்டத்தில் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (40) இவர்களுக்கு யுவனேஸ் (22) என்ற மகனும், மீனாட்சி 19 என்ற மகளும் உள்ளனர். கண்ணனின் குடும்பத்தினர் லாடபுரத்தில் மயிலூற்று அருவி சாலையில் உள்ள கண்ணுக்குழி என்ற கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சங்கீதா நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இரவு நேரமாகியும் சங்கீதா வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது மகன், மகள் இருவரும் அவரை தேடினர். அப்போது கண்ணுக்குழி வெள்ளிவாரியில் மரத்தில் சங்கீதா தூக்கிட்டு பிணமாக தொங்கியதை பார்த்தனர்.

[the_ad id=”7251″]

இதுகுறித்து கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து லாடபுரம் வந்த கண்ணன் காவலரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல் துணை ஆய்வாளர் அண்ணாதுரை நேற்று வழக்கு பதிந்து சங்கீதாவின் உடலை கைப்பற்றி அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: