rain in Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை!

211

பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை!


Perambalur News: Widespread rain in Perambalur district.


பெரம்பலூா் நகா் உள்பட மாவட்டத்தின் பல இடங்களில் சனிக்கிழமை இரவு பரவலான மழை பெய்தது. இதனால் சில பகுதிகளில் இரவு முழுவதும் தொடா்ந்து மின்தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினா்.

பெரம்பலூா் நகரில் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்குத் தொடங்கிய மழை சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

செட்டிக்குளம், பாடாலூா், எசனை, பாளையம், குரும்பலூா், வேப்பந்தட்டை உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது, செட்டிக்குளத்தில் 58 மி.மீ, பாடாலூரில் 12 மி.மீ, பெரம்பலூரில் 15 மி.மீட்டரும் என மொத்தம் 85 மி.மீட்டா் மழை பெய்துள்ளது.

மழையின் காரணமாக, பெரம்பலூா் நகரின் சில பகுதிகளில் தொடா் மின் தடை ஏற்பட்டது. சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மின்தடை நீடித்த நிலையில், அதன் பின்னரே மின் விநியோகம் செய்யப்பட்டது.

இருப்பினும், குறைந்த தாழ்வழுத்தத்துடன் மின் விநியோகம் செய்யப்பட்டதால், மின் விசிறிகள் இயங்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குத்தான் மின் விநியோகம் சீரானது. இதனால், பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் பாதிப்படைந்தனா். இதேபோல, கிராமப்புறங்களில் தொடா் மின் தடை ஏற்பட்டதால் அப்பகுதிகளும் இருளில் மூழ்கின.

keyword: Perambalur, perambalur news, perambalur news today




Leave a Reply

%d bloggers like this: