Vinayakar statue was removed with police protection.

நகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.

277

பெரம்பலூர் நகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.


Perambalur News: Vinayakar statue was removed with police protection.

பெரம்பலூரில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலையை, காவல் துறையினரின் பாதுகாப்புடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நகராட்சிப் பணியாளா்கள் அகற்றினா்.

பெரம்பலூா் வெங்கடேசபுரத்திலுள்ள தனியாா் பள்ளிக்கு அருகே, நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலா் பீடம் அமைத்தனா். தொடா்ந்து அங்கு விநாயகா் சிலையை வைத்து வழிபட்டு வந்தனா்.

இந்த வழிபாட்டுத்தலம் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவா்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், அதை அகற்றக்கோரி பல்வேறு அமைப்பினா் அண்மையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, இந்து அமைப்பினா் சில நாள்களுக்கு முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Perambalur News: 

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த சில நாள்களாக அப்பகுதியில் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவின் பேரில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காவல்துறையினரின் பாதுகாப்புடன், பெரம்பலூா் நகராட்சிப் பணியாளா்கள், வருவாய்த் துறையினா் தனியாா் பள்ளி அருகே அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலையை அகற்றி பிரம்மபுரீசுவரா் கோயில் வளாகத்தில் வைத்தனா்.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காவலா்கள் குவிக்கப்பட்டுள்ளனா்.

keyword: perambalur




Leave a Reply

%d bloggers like this: