கொரோனா தொற்றால்

கொரோனா தொற்றால் பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் இருவா் பலி.

742

கொரோனா தொற்றால் பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் இருவா் பலி.


Perambalur News: Two more died in the Perambalur district due to the corona.

பெரம்பலூா் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்த பாமக நகரச் செயலா் உள்பட 2 போ் நேற்று (சனிக்கிழமை) இரவு உயிரிழந்தனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) வரை 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 168 போ் சிகிச்சையில் குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பெரம்பலூா் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பெரம்பலூா் நகரச் செயலா் தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (சனிக்கிழமை) இரவு அவா் உயிரிழந்தாா். இவருக்கு வயது 41.

Perambalur News

இதுபோல பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்த 51 வயது நபர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் நேற்று (சனிக்கிழமை) இரவு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே சித்த மருத்துவா் ஒருவா்  உயிரிழந்த நிலையில், இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிப்படைந்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆக உயா்ந்துள்ளது.

Keywords: Perambalur News, Perambalur News Today, Perambalur District News, Perambalur Mavattam, கொரோனாLeave a Reply

%d bloggers like this: