Transgender suicide by hanging near Perambalur.

பெரம்பலூர் அருகே, தூக்குப்போட்டு திருநங்கை தற்கொலை

664

பெரம்பலூர் அருகே, தூக்குப்போட்டு திருநங்கை தற்கொலை.


Perambalur News: Transgender suicide by hanging near Perambalur.


பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் எம்.ஜி.ஆர் நகரில் தங்கியிருந்த வீட்டில் திருநங்கை ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு யுவன்சங்கர் ராஜா(வயது 21) என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். யுவன்சங்கர் ராஜா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருநங்கையாக (மூன்றாம் பாலினத்தவர்) மாறி விட்டதால், அவர் தனது பெயரை காஜல் என்று மாற்றிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் சேலம் மாவட்டத்தில் உள்ள சக திருநங்கைகளுடன் வசித்து வந்தார். permbalur news

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காஜல் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரில் ஒரு வீட்டில் வசிக்கும் அம்மாபாளையத்தை சேர்ந்த மனிஷா(44), எடப்பாடியை சேர்ந்த லவ்வியா(21) ஆகிய திருநங்கைகளுடன் தங்கியுள்ளார். நேற்று காலை வீட்டில் இருந்து மனிஷா மற்றும் லவ்வியா ஆகியோர் வெளியிலும் சென்று விட்டனர். மனிஷா மதியம் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டிற்குள் காஜல் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் உடனடியாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காஜலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். perambalur news today

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருநங்கை காஜல் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

keyword: Perambalur 




Leave a Reply

%d bloggers like this: