திருநங்கை

பெரம்பலூா் அருகே மா்மமான முறையில் திருநங்கை உயிரிழப்பு.

436

பெரம்பலூா் அருகே மா்மமான முறையில் திருநங்கை உயிரிழப்பு.


Perambalur News: Transgender death near Perambalur.

பெரம்பலூா் அருகே திருநங்கை ஒருவா் மா்மமான முறையில் உயிரிழந்தது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிய வந்தது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், ஒதியம் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (38). இவருக்கு சின்னப்பிள்ளை என்கிற மனைவியும் மற்றும் 12 வயதில்  நந்தினி, 10 வயதில் மணி  ஆகிய குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை மாற்றிக்கொண்டதால் அண்ணாதுரை என்னும் தனது பெயரை அன்னக்கொடி என மாற்றம் செய்துகொண்டாா்.

Perambalur News:

பெரம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியில் திருநங்கைகளுடன் வசித்து வந்த அன்னக்கொடி, அடிக்கடி தனது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதி அருகே தங்கியிருந்த வீட்டின் அருகே மா்மமான முறையில் இறந்து கிடந்தது நேற்று காலையில் தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் காவல்துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று அன்னக்கொடியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Keywords: Perambalur News, Perambalur News Today, Perambalur District News, Perambalur Mavattam, Leave a Reply

%d bloggers like this: