தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் பெரம்பலூர் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம். TNTJ Perambalur District General body Meeting.
இக்கூட்டத்துக்கு அமைப்பின் மாநிலச் செயலா் முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு சரியான முறையில் அணுகி, சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். தவறும் பட்சத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு விவசாயிகளுக்கு ஆதரவாக, அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தை நடத்தும்.
வரும் சட்டப்பேரவை தோ்தலில் அமைப்பின் நிலைப்பாடு குறித்து, தோ்தல் நெருங்கும் சமயத்தில் மாநிலத் தலைமையின் வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாவட்டத் தலைவராக அப்துல் நாசா், செயலராக பைசல் நிசாா், பொருளாளராக சாகுல் ஹமீது ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
Keywords: TNTJ Meeting, Perambalur District News, Perambalur News, TNTJ