கத்தியை காட்டி மிரட்டிய

கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் சிறையில் அடைப்பு.

439

கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் சிறையில் அடைப்பு.


Perambalur News: Three jailed for threatening in Perambalur.

பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சூர்யா, தமிழ்ச்செல்வன்  ஆகிய மூவரும் இதற்கு முன்பு நடந்த பல்வேறு பிரச்சனைகளுக்காக வருவாய்க் கோட்டாட்சியர் முன்னிலையில் பிணை பத்திரம் எழுதிக் கொடுத்திருந்தனர். இந்நிலையில் ஓராண்டுக்கு எந்தப்பிரச்சனைகளிலும் ஈடுபடக்கூடாது என உறுதி அளித்த பிணை உத்தரவை மீறி, பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியை சேர்ந்த இளவரசி என்பவரிடம் கடந்த 9-ம் தேதி மதியம் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே இளவரசி தனியாக சென்று கொண்டிருந்த பொழுது, மூவரும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியும், தகாத வார்த்தைகளால் திட்டியும் அவர் வைத்திருந்த ரூ.500 பணத்தையும் பிடுங்கிக் கொண்டு அவரை கீழே தள்ளியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக, இளவரசி 10-ம் தேதி பெரம்பலூர் காவல்நிலையத்தில் கொடுத்தப் புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் செந்தமிழ்ச் செல்வி மூவரையும் கைது செய்திருந்தார். பின்னர் மூவருக்கும் 110 சிஆர்பிசி வழக்குப் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் சுப்பையாவும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார்.

Perambalur News :

இந்நிலையில் இந்த விசாரணையின் அடிப்படையில் நேற்று (திங்கள் கிழமை) பெரம்பலூர்  ஆர்டிஓ பிறப்பித்த உத்தரவில், பிணை உத்தரவை மீறி பெண்ணிடம் தகராறு செய்த மூவரையும் 1 வருடத்திற்கு சிறையில் அடைக்குமாறு தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்த மூவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு, ஓராண்டுக்கு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Keywords: Perambalur News, Perambalur News Today,
Leave a Reply

%d bloggers like this: