Those from Chennai will be isolated

பெரம்பலூருக்கு சென்னையில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

343

பெரம்பலூருக்கு சென்னையில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவர். Those from Chennai will be isolated

பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்னையில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை துணை இயக்குநர் கீதாராணி தெரிவித்துள்ளார். இதைப்பற்றி அவர் கூறியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது கோரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுகாதாரத்துறை வருவாய்துறை மற்றும் காவல்துறை மூலம் வெளி மாவட்டங்களில், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பெரம்பலூர் மாவட்ட நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

[the_ad id=”7251″]

பெரம்பலூரில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் திறக்க அனுமதி கோரி மனு.

எல்லையில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு பெரம்பலூரில் வீரவணக்கம்.

அதிகளவில் தற்போது சென்னையிலிருந்து பல மாவட்டங்களுக்கும் செல்கின்றனர். அதே போல பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை புரிகின்றனர். இ-பாஸ் இல்லாமல் சென்னையிலிருந்து வருபவர்கள் தகவல் தெரிவிக்காமல் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

வெளிமாநிலம், வெளிமாவட்டம் குறிப்பாக சென்னையில் இருந்து வரும் நபர்கள் தாங்களாகவே முன்வந்து பெரம்பலூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்த ஏற்பாடுகள் செய்துள்ள பகுதிகளான வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லூரி, வேப்பூர் அரசு கலைக்கல்லூரி, ரோவர் கல்லூரி விடுதி மற்றும் பாடாலுர் அரசினர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தி தங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

[the_ad id=”7251″]

வெளியில் இருந்து வரும் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஒத்துழைப்பு தரவேண்டும். அந்தந்த பகுதயில் வசிக்கும்  பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு புதிதாக சென்னை, வெளிமாநிலம், வெளிநாடு மற்றும் வெளிமாவட்டத்தில் இருந்து வரும் நபர்கள் குறித்த சுகாதாரத்துறை மற்றும் 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் எவருக்கேனும் காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவனைக்கு சென்று சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று கொள்ளலாம். அதே போல் பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று கூறினார்.

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: